கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், மாற்றுத் திறனாறிகள் நலத்துறை சார்பில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். உடன் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. மாணிக்கம் மற்றும் குளித்தலை சார் ஆட்சியர் தி. சுவாதி ஆகியோர் உள்ளனர்.