கன்னியாகுமரி மலையாள சிறுபான்மையினர் கோரிக்கைகள்: கேரள முதலமைச்சரிடம் மனு
குழித்துறை, செப்.25- கன்னியாகுமரி மாவட்ட மலை யாள சிறுபான்மை மக்களின் கல்வி உரிமைகள் தொடர்பான கோரிக்கை களை வலியுறுத்தி கேரளா முத லமைச்சர் பினராயி விஜயனிடம் விரி வான மனு வழங்கப்பட்டது. குழித்துறையில் நடைபெற்ற ஜன நாயக மாதர் சங்க மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, மலையாள சமாஜம் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து மனு வழங்கினர். கோரிக்கைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மலையாள சிறுபான்மை மக்க ளுக்கு தாய்மொழியில் கல்வி பெறு வதற்கான போதுமான வசதிகள் இல்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மலை யாள மொழியில் படிக்கும் வசதி வழங்கப்படவில்லை என்றும், தாய்மொழி பாடநூல்கள் அச்சிடப்பட வில்லை, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், மலையாள மொழியில் கல்வி பெற்ற மாணவர்களுக்கு அர சுத்துறையில் பணியாளராக சேரும் அடிப்படை உரிமை மறுக்கப்படுவ தாகவும் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, பாலக் காடு, கோட்டயம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 5% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது போல், கன்னியாகுமரி மாவட்ட மலையாள மொழி மக்களுக்கும் இதுபோன்ற ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா முதலமைச்சர் தமிழ்நாடு அரசுடன் தொடர்புகொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மலையாள சமாஜம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் வி. ராமசந்தி ரன் நாயர், உதவித் தலைவர் கவிஞர் கரிக்ககம் ஸ்ரீகுமார், செயலாளர் அனில்குமார், மாலைகோடு ஸ்ரீகண்டன் நாயர் மற்றும் கிருஷ்ணபுரம் முருகன் ஆகியோர் கேரளா முதலமைச்சரை சந்தித்து மனுவை வழங்கினர்.
