மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் இன்று பதவியேற்கிறார்
சென்னை, ஜூலை 24- தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலை வர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பி னர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக-வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகி யோரின் பதவிக் காலம் ஜூலை 24 அன்று டன் நிறைவடைந்தது. காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் கடந்த ஜூலை 19 ஆம் தேதி தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இதைய டுத்து திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்த பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக வெள்ளியன்று பதவி யேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநிலங் களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக வெள்ளி யன்று பதவியேற்க உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் வென்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வியாழனன்று தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லி செல்லும் முன் விமான நிலை யத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்ப வும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துகளுடன் தில்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன் என்ப தைப் பெருமையோடு சொல்லிக் கொள் கிறேன். எனது கன்னிப் பேச்சு எதை மையப் படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்லக் கூடாது. சில விஷயங்களை, இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவது போல இங்கு பேசக்கூடாது. எனது ஆறாண்டு கால பயணத்தைக் கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” என தெரிவித்தார்.