tamilnadu

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க யூனியனில் பார்வையாளர் அந்தஸ்தை மீண்டும் இஸ்ரேலுக்கு வழங்க வேண்டும் என்று அல்ஜீரியா ஆதரவு திரட்டி வருகிறது. ஆப்பி ரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சில நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அல்ஜீரியா வின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராம்தானே லமாம்ரா நாடு, நாடாக சுற்றி வந்துள்ளார். இவர்களின் முயற்சி வெற்றி பெறுமா என்பது இதுவரையில் தெளி வாகவில்லை.

சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் உதவியுடன் தனது  விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும்  புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஈரான் மேற்கொள்ள விருக்கிறது. தற்போதுள்ள நிலையில் மேலும் 15 ஆண்டுகளுக்கு விமான நிலையங்கள் தங்கள் சேவைகளை வழங்க முடியும். ஆனால் சர்வதேசத்தரத் திலான விமான நிலையங்கள் தேவைப்படுகின்றன என்று ஈரான் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சியாவாஷ் அமிர்மோக்ரி கூறுகிறார். நாட்டின் சில பகுதி களில் சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியோடு புதிய விமான நிலையங்களைக் கட்டப்போகிறார்கள்.

பிரிட்டனில் உள்ள குடும்பங்களின் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கான செலவு எகிறப் போகிறது. ஏப்ரல் மாதத்திற்கான பணத்தை கட்டுகையில் தற்போதுள்ளதை விட 50 விழுக்காடு அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். சராசரியாக ஆண்டுக்கு 693 பவுண்டுகள் அதிகமாகக் கட்டப் போகிறார்கள். இது குடும்பங்களின் வருமானத் தில் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று பொரு ளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.