tamilnadu

உணவு கேட்டு வந்த 800 பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேல்!

உணவு கேட்டு வந்த 800 பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேல்!

காசா, ஜூலை 12 - காசா பகுதியில் உள்ள பாலஸ்தீ னர்களுக்கு உணவு - மருந்து, தண்ணீர்  என எதையும் கொடுக்காமல் பட்டினி யை உருவாக்கி அதையே இனப்படு கொலைக்கான ஆயுதமாக இஸ்ரே லும் அமெரிக்காவும் பயன்படுத்தி வரு கின்றன.  தற்போது அமெரிக்க - இஸ்ரேல்  நிறுவனமே, அங்கு நிவாரணப் பொருட்  களை வழங்கி வருகிறது. இந்நிலை யில் நிவாரண முகாம்களுக்கு உணவு பெறச் சென்ற பாலஸ்தீனர்கள் மீது துப்  பாக்கி சூடு நடத்தி சுமார் 800 பேரை படு கொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.   ஐ.நா. மனித உரிமைகள் அலுவல கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.  ஜெனீவாவில் நடந்த செய்தியா ளர் சந்திப்பில் பேசிய ஐ.நா. மனித  உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசானி, “ஜூலை 7 நிலவரப்படி, காசாவில் உள்ள உதவி விநியோகப் பகுதி களில் சுமார் 798 பாலஸ்தீனர்கள் சுட்டுப்  படுகொலை செய்யப்பட்டுள்ளதை எங்கள் அமைப்பு ஆவணப்படுத்தியுள் ளது” என்றார்.  “காசா மனிதாபிமான அறக்கட் டளை (GHF) தலங்களுக்கு அருகில்  615 பேர், உதவிப் பொருட்கள் கொண்டு  செல்லப்படும் வழிகளில் 183 பேர்  இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்” என்றும் அவர் கூறினார். ஜூலை 7-க்குப் பிறகு நடைபெற்ற  தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  குறித்த தகவல்களை இவ்வமைப்பு  வெளியிடவில்லை. எனினும், இக்காலக் கட்டத்திலும் நாளொன்றுக்கு காசா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.