ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை, நாணயம் வெளியீடா? பிரதமர் மோடியின் நடவடிக்கையால் இந்திய அரசியலமைப்புக்கு அவமதிப்பு!
புதுதில்லி, அக். 2 - ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் வெளி யிட்டது இந்திய அரசியலமைப்பு மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் மற்றும் அவமதிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடி யுள்ளது. இந்து கடவுள் உருவத்தை நாணயத்தில் பொறிப்பதா? ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, புதனன்று (அக். 1) தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்ததை குறிக்கும் விதமாக ரூ. 100 நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார். இதனையே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமை யாக சாடியுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பை ஒரு போதும் ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ‘இந்துத்து வா ராஷ்டிரம்’ என்ற அதன் மத வெறிக் கருத்தாக்கத்தின் அடை யாளமாக ஆர்எஸ்எஸ் விளம்பரப் படுத்தும் ஒரு இந்து தெய்வத்தின் “பாரத மாதா” உருவத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ நாண யத்தில் பொறிப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது. நடக்காத சம்பவத்தை வரலாறாக்க முயற்சி 1963 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் சீருடையுடன் பங்கேற்றிருப்பது போன்ற காட்சி அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றையே திரிக்கின்ற செய லாகும். இந்தியா - சீனப் போரின் போது ஆர்எஸ்எஸ்-இன் தேசப்பற்றினை பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக அவர்களை பிரதமர் நேரு அழைத்ததால் தான் அந்த சிறப்புப் பேரணியில் அவர்கள் கலந்து கொண்டதாகக் கட்டமைக்கப்பட்ட பொய்ச் செய்தியின் அடிப்படை யிலேயே இந்த படமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது தவறானது. உண்மையில் அன்று நிகழ்ந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர் என்பது எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அது தற்செயலானதாகத் தான் இருந்திருக்கும். ஆர்எஸ்எஸ்-சின் வெட்கக்கேட்டை மூடிமறைக்கும் முயற்சி இந்த முழு நடவடிக்கையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெட்கக் கேடான நடவடிக்கைகளை மறைக் கும் முயற்சியாகும். இந்திய விடு தலைப் போரில் இருந்து ஆர்எஸ் எஸ் முற்றிலும் விலகியே இருந்தது. பிரிட்டிஷ் காலனி அரசின் ஆதிக்கத் திற்கும், அவர்கள் மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் துணை போனது ஆர்எஸ்எஸ். இதன் மூல மாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்த இந்திய மக்களின் ஒற்றுமை யையும் அது குலைக்க முயன்றது. சுதந்திர இந்திய வரலாற்றில் நிகழ்ந்த பல கொடூரமான மதவாத வன்முறைகளில் ஆர்எஸ்எஸ்-சின் பங்கு எத்தகையது என்பது குறித்து அரசின் அதிகாரப்பூர்வமான விசா ரணை ஆணையங்களின் பல அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இணை சங்-பரிவார அமைப்புகள் மனுவாத சித்தாந்தத்தை பரப்புவதன் மூல மாக சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களை குறி வைத்து வருகின்றன. அரசியலமைப்பின் கண்ணியத்தை குலைத்த பிரதமர் மோடி இது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை வரலாறு. ஆர்எஸ்எஸ்-சின் இந்த உண்மை முகத்தை தான், பிரதமர் தனது பத வியை தவறாகப் பயன்படுத்தி மறைக்க முயற்சிக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலமாக பிரதமர் தான் வகிக்கும் அரசியலமைப்பு பதவி யின் கண்ணியத்தை குறைத்து விட்டார். இவ்வாறு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
