tamilnadu

அடுக்குமாடி குடியிருப்பில் உள் வாடகையா?  

அடுக்குமாடி குடியிருப்பில் உள் வாடகையா?  

அவிநாசி, ஆக.29 - அவிநாசி நகராட்சி பகுதியில் நகர்ப்புற வாழ்வாதார மேம் பாட்டு வாரியம் கட்டியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில், வீடுகள் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  அவிநாசி நகராட்சிக்குட்பட்ட சூளை அருகே 2.93  ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள் ளது. இந்தக் குடியிருப்பில் 445 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதி முக ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டு, திமுக ஆட்சி காலத்தில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நி லையில் இந்த குடியிருப்பில் வீடு வழங்கப்பட்ட நபர்கள்  குடியிருக்காமல், வேறு நபர்கள் குடியிருக்கின்றனர். மேலும்,  பல வீடுகள் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசா ரணை நடத்தி, உள்வாடகைக்கு விட்டவர்கள் மீது நடவடிக்கை  எடுப்பதுடன், அவர்களுக்கு வழங்கிய குடியிருப்பு உரி மத்தை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதியைச்  சேர்ந்தோர் வலியுறுத்தினர்.