சென்னை, ஜூன் 2- சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகை யில் மின்சார ரயில் நிலையம் அமைக்கப்படு கிறது. ரயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்துக்குள் வரும் வகையில் ஆகாய நடைபாலமும் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாது காப்புக்காக புதிய காவல் நிலையமும் அமைக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் நிறுத்தப்படவுள்ளது.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் விடக்கூடாது என்று சி.எம்.டி.ஏ. அதிகாரி கள், தாம்பரம் காவல் ஆணையருக்கு கடிதமும் எழுதியுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி கூறுகையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பேருந்து களும் தென்மாவட்ட பேருந்துகளாக வரை யறுக்கப்பட்டுள்ளன. எனவே விழுப்புரம் முதல் கன்னியா குமரி வரையிலான அனைத்து வெளியூர் பேருந்துகளும் கிளாம்பாக்கம் நிலை யத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் நிலையத்துடன் நிறுத்தப் படுவதால் சென்னை மற்றும் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி பல பேருந்து மாறி தங்கள் வசிப் பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.