tamilnadu

img

மாநில நெடுஞ்சாலைகளை அரசே பராமரிக்க வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலைகளை  அரசே பராமரிக்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக. 4-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க 9 ஆவது துறையூர் உட்கோட்ட மாநாடு திங்களன்று திருச்சி துறையூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, சங்க உட்கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை உட்கோட்ட இணைச் செயலாளர் சரவணன்  வாசித்தார். உட்கோட்ட துணைத் தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை உட்கோட்ட செயலாளர் குமார் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை உட்கோட்ட பொருளாளர் கருப்பண்ணன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார். சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தனியார் மயப்படுத்தலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். உட்கோட்ட துணைத் தலைவர் செந்தில் நன்றி கூறினார்.