இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு : திருப்பூரில் சங்கமித்த தியாகிகள் நினைவுச் சுடர்கள் - கொடி!
பாராட்டு விழா - கருத்தரங்கில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு
திருப்பூர், ஆக. 23 - திருப்பூரில் இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு 27 ஆவது மாநில மாநாட்டின் தொடக்கமாக தியாகிகள் ஜோதி பெறுதல் மற்றும் வெண் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாநாட்டு வளாகமான தோழர் சீத்தாராம் யெச்சூரி நினை வரங்க வளாகத்தில், தியாகிகள் சோமு - செம்பு, குமார் நுழை வாயில் பகுதியில் சனிக்கிழமை யன்று காலை நடைபெற்றது. மதுரையில் இருந்து மாண வர் சங்கத்தின் துவக்க காலத் தலைவர் வே. பரமேசுவரன் எடுத்துக் கொடுத்து கொண்டு வரப்பட்ட மாணவத் தியாகிகள் செம்பு - சோமு ஆகியோரது நினைவு ஜோதியை ச. குமர வேல், மி. காவியா, மு. தமிழ் பாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாபநாசத்தில் மாணவர் சங்க முன்னாள் தலைவர்கள் கே.ஜி. பாஸ்கரன், க.ஸ்ரீராம், பி.உச்சிமாகாளி ஆகியோர் எடுத்துக் கொடுத்த, தியாகி வி.கே.புரம் குமார் நினைவு ஜோ தியை ரா.பாரதி, கு.சந்துரு ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த 94 குழந் தைகள் நினைவாக கல்வி வணி கத்திற்கு எதிராக சாமி.நடரா ஜன், சி.ஜெயபால் ஆகியோர் எடுத்துக் கொடுத்து, கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதியை ர. பாலமுருகன் சா.பிரவீன் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 26ஆவது மாநில மாநாடு நடைபெற்ற திருவாரூரில் இருந்து எம்எல்ஏ நாகை மாலி, ஐ.வி. நாகராஜன் எடுத்துக் கொடுத்து கொண்டுவரப்பட்ட 27ஆவது மாநாட்டிற்கு ஏற்றும் வெண்கொடியை கா. பிருந்தா, ரே. கார்த்திகாதேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக நினைவு ஜோதி கள், கொடியை பெற்றுக் கொள் ளும் நிகழ்ச்சியை அகில இந்திய துணைத் தலைவர் சி. மிருதுளா ஒருங்கிணைத்தார். அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, துணைத் தலைவர் மனோஜ் ஜாக்கர் ஆகியோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு மாணவர் சங்கம் தொடங் கப்பட்ட போது விதையாக, வேராக பணியாற்றி வளர்த்த தலைவர்கள் விழிப்பு எம். நட ராஜன், ஆசிரியர் செல்லதுரை, சண்முகசுந்தரம், வழக்கறிஞர் மோகன், அன்வர், மகேஷ் ஆகி யோரை கவுரவித்து அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி, மாநிலச் செயலா ளர் கோ. அரவிந்தசாமி, மத்தி யக்குழு உறுப்பினர் ஜி.கே. மோகன் ஆகியோர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர். பிரதி நிதிகள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து முழக்கங் கள் எழுப்பினர். இது உணர்ச்சி மயமான நிகழ்ச்சியாக இருந்தது. கருத்தரங்கம் மாலையில் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் ஜி.கே. மோகன் தலைமையில் நடை பெற்ற இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர், “வகுப்பறைக ளும், வகுப்புவாதமும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றி னார். மாணவர் சங்கத்தின் முன் னாள் செயலாளர் எஸ்.கண் ணன், “வணிகமயத்திற்கு எதி ரான இயக்கம்”என்ற தலைப் பில் கருத்துரையாற்றினார்.