tamilnadu

img

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டு இலச்சினை வெளியீடு

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டு இலச்சினை வெளியீடு

புதுக்கோட்டை, ஜூலை 14-  திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 22 முதல் 24ஆம் தேதி வரை இந்திய மாண வர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி புதுக்  கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறி வியல் இயக்க அரங்கத்தில் இந்திய மாணவர் சங்கத்  தின் மாநிலக் குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் ஜி.அரவிந்தசாமி மாநாட்டுப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.  தொடர்ந்து மாநில மாநாட்டின் இலச்சினை வெளியிடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், புதுக் கோட்டை மாவட்டச் செய லாளர் ஆர். வசந்தகுமார், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கார்த்திகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.