tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

புதுதில்லி, அக். 10 - இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான நட்பின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பையும், உறவுகளையும் இரு அமைச்சர்களுமே சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர்.