tamilnadu

img

வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நீலகிரி: தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப் பில் 1,303 வரையாடுகள் இருப்பது தெரிய வந்து உள்ளது.  நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக் கல் மாவட்டங்களில் 14 வனக்கோட்டங்களில் 177 வரையாடு வாழ்விடப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24 முதல் 27 வரை, 4  நாட்கள் 8 ஆயிரம் பேர்  பங்களிப்புடன் இந்தக்  கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. நீலகிரி வரையாடு குட்டிகள் டிசம்பர், ஜன வரி மாதங்களில் பிறக் கின்றன. தாய், குட்டி இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது. நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக் கெடுப்பு அறிக்கையை சென்னையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளி யிட்டார். தமிழ்நாட்டில் அர சின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் வரை யாடுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங் களில் வரையாட்டினை ‘வருடை’ என்று குறிப்பிடு கிறார்கள். ‘வரை’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘மலை’ என்று பொருள்.  மலைகளில் வாழ்கின்ற ஆடு என்பதால் வரையாடு என்று பெயர் வந்தது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு, அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.