tamilnadu

img

நூறுநாள் வேலையை முழுமையாக அமல்படுத்துக ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலையை முழுமையாக அமல்படுத்துக ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.1 4-  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு  செய்து திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவ லர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருவரங்குளம்  மேற்கு ஒன்றியத் தலைவர் பி. ஷோபனா  தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் உ. நிர்மலாராணி சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலைவர்  எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றியச் செயலா ளர் வி.கலைச்செல்வி, பொருளாளர் கே. வெள்ளையம்மாள் உள்ளிட்டோர் பேசினர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு நூறுநாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவு படுத்த வேண்டும். கூலியை ரூ.600  ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  தஞ்சாவூர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கலைச்செல்வி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் பி.மேரி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.எஸ். சுமதி, ஜி.  அம்சவள்ளி ஆகியோர் பேசினர். இதில், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாக ராஜனைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  திருச்சிராப்பள்ளி  மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் சார்பில், செவ்வாய் அன்று மங்கலம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் யசோதா தலைமை தாங்கினார். ஒன்றியத்  தலைவர் மரகதம் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி, மாவட்டச் செய லாளர் மல்லிகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாண்டியன்,  சிஐடியு பொறுப்பாளர் சந்திரமோகன், விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றியப் பொருளா ளர் ரங்கராஜ், கிளைச் செயலாளர் யோக நாதன் ஆகியோர் பேசினர்.