இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
அறந்தாங்கி, அக். 16- புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலருக்கான பயிற்சியினை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் செழியன் பயிற்சியினை பார்வையிட்டு, கற்றல், கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சியில் 20 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்பொருள் சார்ந்த தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும், கற்றல், கற்பித்ததல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது பற்றி விளக்கப்பட்டன. மேலும், மாணவர்களின் கற்றல் நிலை அறிந்து, பாட கருத்துக்களை நடத்துதல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, மாணவரின் வாசித்தல் எழுதுதல் மற்றும் அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
