tamilnadu

img

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் `மௌன’ ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள்  `மௌன’ ஆர்ப்பாட்டம் 

கரூர், அக். 11-  சாலைப் பணியாளர்களுக்கு எதிராக அநீதியை இழப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், சாலைப் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கண், காது, வாயை மூடி மெளன புரட்சி போராட்டம், நெடுஞ்சாலைத்துறை கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. செவந்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணி, வேளாண்மை அமைச்சு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆ.சங்கர், மாநகராட்சி ஓய்வூதியர் சங்கச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினர்.  மாவட்ட இணைச் செயலாளர் ஆர். ராமமூர்த்தி, உட்கோட்ட தலைவர் வி.பழனிவேல், செயலாளர் எம்.வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஆர். சிவக்குமார் நன்றி கூறினார்.  திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், மன்னார்புரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் கண், காது, வாயை மூடி, மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ், கோட்ட துணைத் தலைவர்கள் மலர்மன்னன், கோவிந்தராஜன், கோட்ட இணைச் செயலாளர் சௌந்தர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.