tamilnadu

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் மத்தியஸ்தர் நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல்  மத்தியஸ்தர் நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 2 - தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ‘பெப்சி’க்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தைத் தொடங்கி யிருப்பதாக ‘பெப்சி’ குற்றம் சாட்டி வந்தது. இந்த புதிய சங்கத்தின் உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற் றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2 அன்று பெப்சி கடி தம் அனுப்பியிருந்தது. இதற்கு எதிராக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்தது. இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது,  தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவரையொருவர் சார்ந்துள்ள நிலையில் பெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமாத் தயாரிப்பு பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு சங்கங்கள்  இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதால், அவர்களுடன் பணியாற் றுமாறு தங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். மேலும் குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் தங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாங்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இரு சங்கங்கள் இடையேயான பிரச்ச னையைப் பேசித் தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நிய மிக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்துத் தெரிவிக்க இரு தரப்புக்கும் உத்தர விட்டு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த வழக்கு புதன்கிழமை (ஜூலை 2) விசாரணைக்கு  வந்தபோது, இந்தப் பிரச்சனையில் ஓய்வுபெற்ற நீதிபதி  எம். கோவிந்தராஜை நியமிக்கலாம் என்று இரு தரப்பும்  சம்மதம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை  உயர் நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்து உத்தரவிட்டு உள்ளது.