பனாஜி, ஜன.10- கோவா மாநில பாஜக அமைச் சர் மைக்கேல் லோபோ தனது பதவி யை அதிரடியாக ராஜினாமா செய் துள்ளார். கோவா சட்டப்பேரவைக்கு தேர் தல் அறிவிக்கப்பட்ட இரண்டே நாட் களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தனது பதவியை ராஜி னாமா செய்திருப்பது பாஜக வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் லோபா, அறிவியல் மற்றும் தொழில்நுட் பத்துறை அமைச்சராக இருந்து வந்தார். எனினும் சமீபகாலமாக கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையே உரசல்கள் அதிகமா கவே, தனது அதிருப்தியை வெளிப் படையாகவே ஊடகங்களுடன் லோபா பகிர்ந்து கொண்டார். “உயர் பதவியில் உள்ள சிலர், என் நிழலைக் கண்டு அஞ்சுகிறார் கள்” என்று தொடர்ந்து கூறிவந்த அவர், கடந்த மாதம், “பாஜக தன்னு டைய அசல் தன்மையை இழந்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி, இனி வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொள்ள முடியாது. கட்சித் தொண்டர்களுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் பாஜகவில் இல்லை. கட்சிக்குள் கோஷ்டிகள் உள்ளன. கட்சி இன்று வணிகமய மாகி விட்டது” என்றும் பகிரங்க மாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே, தற்போது அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய மைக்கேல் லோபோ: “நான் கோவா அமைச்சர் பதவி யை ராஜினாமா செய்துவிட்டேன். கலங்குட் தொகுதி மக்கள் எனது முடிவை மதிப்பார்கள் என்று நம்பு கிறேன். எனது சட்டமன்ற உறுப்பி னர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். மேலும், பாஜக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன். மாலையில் காங்கிரஸ் கட்சியிலும் இணையவுள்ளேன்” என்று தெரி வித்துள்ளார். இதன்மூலம் பாஜகவில் இருந்து பதவி விலகும் சிறு பான்மை சமூகத்தை சேர்ந்த மூன்றாவது எம்எல்ஏ லோபோ என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின் னணியில் லோபாவின் இந்த ராஜி னாமா முடிவும், அவர் காங்கிர சில் இணைவதும் பாஜக தலை வர்களை அதிர்ச்சியில் தள்ளி யுள்ளது. இவரது வருகையால் பர்டேஸ் தாலுகாவில் காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெறும் என்று நம்பப்படு கிறது. அதுமட்டுமின்றி சலிகவோ, சியோலிம் மற்றும் மபுசா ஆகிய தொகுதிகளிலும் மைக்கேல் லோபோ செல்வாக்கு பெற்ற நபர் ஆவார். எனவே, லோபோவையே, சலிகவோ தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.