tamilnadu

img

50 சதவீத பட்டுநூல் விலை உயர்வை குறைத்திடுக!

கும்பகோணம், டிச.7 -  50 சதவீத பட்டு நூல் விலை உயர்வை குறைக்க கோரியும், கைத்தறி பட்டு துணி ரகங்களுக்கு  5  சதவீத ஜிஎஸ்டி வரியை, 12 சதவீத மாக உயர்த்த உத்தேசிக்க இருப்பதி லிருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் தஞ்சை, திருவாரூர், அரியலூர், மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் மற்றும் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சிஐடியு நெசவாளர் சங்க மாவட்ட தலைவர் நாகேந்திரன் கூறுகையில், “தமிழகத்தில் பாரம்பரிய மான பட்டு கைத்தறி சேலைகள் தயாரிக்கப்படும் ஒரு சில இடங்களில் தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டத்தில் இத்தொழிலை நம்பி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.

இதுவரை பட்டு நூல் கிலோ 4 ஆயி ரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த நிலை யில், தற்போது இதன் விலை 50 சத வீதம் உயர்ந்து, 6 ஆயிரம் ரூபாயாகி விட்டது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது வரை கைத்தறி பட்டு ரகங்களுக்கு 5 சத வீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனை ஒன்றிய நிதி அமைச்சகம் 12 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரியிலிருந்து காதி துணி ரகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது போல், கைத்தறி பட்டு ரகங்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். பட்டு நூல் விலையை குறைக்க வேண்டும்” என்றார்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று தலைமை தபால் நிலையம் முன்பு 200-க்கும் மேற்பட்ட தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நெசவாளர் கூட்டமைப்பு தலைவர் லெனின் தலைமை வகித்தார். கும்ப கோணம் பட்டு ஜவுளி உற்பத்தி யாளர் சங்க செயலாளர் டாக்டர் ராயா கோவிந்தராஜன் சிறப்புரை யாற்றினார். பட்டு ஜவுளி உற்பத்தி யாளர் சங்க தலைவர் எஸ்.ஆர்.கோகுல், நெசவாளர் கூட்டமைப்பு குழு  செயலாளர் கோகுல், நெசவாளர் கூட்ட மைப்பு குழு செயலாளர் மோகன், சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் ஜீவ பாரதி, நெசவாளர் சங்க மாவட்ட தலை வர்  என்.பி.நாகேந்திரன் உள்ளிட்ட நெசவாளர்கள் - உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் அருகே திரு புவனத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு கைத்தறி பட்டு சேலைகள் விற்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

;