11 ஆண்டுகளில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை பிடிக்க கூடலூர் வனத்துறை முதன்மை வனப் பாதுகாப்பாளருக்கு அறிவுறுத்தல்
ஊட்டி, ஆக 27- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஓ-வேலி பகுதி. இந்த பகு திக்குள் காட்டு யானை ஒன்று 2014ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக அவ்வப்போது விசிட் அடிப்பது வழக்கம். இது மிகவும் மூர்க்கமான யானை என்ற நிலையில், இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ராதா கிருஷ்ணன் என பெயர் வைத்துள்ள னர். சமீபத்தில் ஓ-வேலி பகுதியின் நியூ ஹோப் அருகே மீண்டும் நுழைந்த ராதாகிருஷ்ணன் யானை, கே.மணி (62) என்ற தொழிலாளியை கொன்றது. ராதாகிருஷ்ணன் யானையின் தாக்கு தலில் இது 12ஆவது மனித உயிர் பலியாகும். இந்த சம்பவத்தைக் கண்டித்து நியூ ஹோப் பகுதி மக்கள் மற்றும் இறந்த வரின் குடும்பத்தினர்கள், உற வினர்கள் கூடலூர் சாலையில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கே.மணியின் உடலை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர். காட்டு யானைகளின் அடிக்கடி தாக்குதல் களைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், யானையைப் பிடிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் நியூ ஹோப் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் 12 பேரைக் கொன்ற ராதா கிருஷ்ணன் காட்டு யானையைப் பிடிக்க அனுமதி கோரி கூடலூர் வனத்துறை அதிகாரிகள், முதன்மை வனவிலங்கு கண்காணிப்பாளர் (PCCF) ராகேஷ் குமார் தோக்ராவுக்கு ஒரு முன்மொழி வை அனுப்பியுள்ளனர். கும்கி யானை இதுதொடர்பாக கூடலூர் வனத்துறை அதிகாரி கூறுகையில், “சுபாஷ் நகர், அரோட்டுபாறை, நியூ ஹோப், திருவள்ளுவர் நகர் மற்றும் ஓ-வேலி பஞ்சாயத்தின் பாரதி நகர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் இந்த யானை சுற்றித்திரிகிறது. அருகிலுள்ள வனப்பகுதிக்குச் செல்ல இந்த யானை மறுக்கிறது. மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், முதன்மை வனவிலங்கு கண்காணிப்பா ளருக்கு நாங்கள் ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளோம் மற்றும் உத்தரவுகளை எதிர்பார்க்கிறோம். அது வரை, யானையைப் பிடிப்பதற்கான செயல்முறையை நாங்கள் மேற்கொள்வோம். ஒரு கால்நடை மருத்துவருடன், பாதுகாப்பாக பிடிக்க ஏற்ற பகுதியை யானை கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் யானை வந்தால், அதைத் திசை திருப்ப இரண்டு கும்கி யானைகளான வாசிம் மற்றும் விஜய் ஆகியவற்றை நாங்கள் நிலையாக வைத்திருக்கிறோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.