கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்குக! டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 5 - கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையா ளர்கள் சங்கத்தினர் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் ஜி.சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சிங்.இரா.அன்பழகன், பொருளாளர் ஆர்.டி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கிராவல் மண் எடுக்க உரிமம் வழங்கப்படாததால், 2 மாதங் களாக மண் எடுக்க முடிய வில்லை. இதனால், லாரி உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் வேலை இழந்துள்ளனர். லாரி உரிமையா ளர்கள் லாரிக்கு மாதக் கடன் தவணை செலுத்த முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள னர். இதை வாழ்வாதாரமாகக் கொண்டு தினக்கூலியாக வேலை செய்யும் ஓட்டுநர்கள், தொழிலா ளர்கள் வேலை இழந்துள்ளதால், கடும் சிரமங்களைச் சந்தித்து வரு கின்றனர். மேலும், கிராவல் மண் கிடைக் காததால் புதிதாக வீடு கட்டுப வர்கள், பொறியாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். கட்டடப் பணிகள் தேங்கியுள்ளன. இது குறித்து கனிம வளத்துறை அலு வலர்களிடம் முறையிட்டும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி வேலை இழந்துள்ள ஆயிரக்கணக் கானோரின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர்.
உணவக உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு
தஞ்சாவூர், ஜூலை 5 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெஜினா நகரைச் சேர்ந்தவர் டி.ஜெயக்குமார் (49). இவர் மருத்துவக் கல்லூரி மூன்றாவது வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகன்யா அரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உணவகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இரு மகன்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு மனைவி சுகன்யாவும் 9 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். பிற்பகல் 3 மணியளவில் ஜெயக்குமார் வீட்டுக்கு திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் செய்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.