tamilnadu

img

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை 4 ஆவது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை  4 ஆவது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்

சென்னை, ஆக.24 - சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நான்காவது முறை யாக மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 60ஆவது  ஆண்டு வைர விழா நேருஜி கலையரங்கத் தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 2022இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப் பட்டது. இந்த மசோதாவை பல்வேறு கார ணங்களைக் குறிப்பிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்” என்றார். “கடந்த ஆக.21 ஆம் தேதி நான்கு  திருத்தங்களைக் குறிப்பிட்டு, நான்காவது  முறையாக மீண்டும் சித்த பல்கலைக்கழகத் திற்கான முன்முடிவை ஆளுநர் திருப்பி  அனுப்பியுள்ளார். ஆளுநரால் திருப்பி  அனுப்பப்பட்ட இந்த மசோதா, சட்ட வல்லு நர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டு, நான்கு திருத்தங்களும் விரைவில் சரி செய்யப்படும்” என்றார் அமைச்சர். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான அனைத்து நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.