tamilnadu

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மாநாட்டு பிரச்சாரம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மாநாட்டு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி, ஜூலை 30- தருமபுரியில் ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில்  நடைபெற இருக்கும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாட்டை விளக்கி வி.பி.சிந்தன் கலைக்குழு சார்பில் ஓசூர்  டிப்போ, பேருந்து நிலையம் ஆகிய இடங்க ளில் கலை நிகழ்ச்சிகள், பிரச்சாரம் நடை பெற்றது. போக்குவரத்து தொழிலா ளர்களின் வி.பி.சிந்தன் கலை குழுவின் ஒருங்கிணைப்பாளர் அசோக், இசைக்கலை ஞர்கள் இளங்கோ, சிவஞானம், பரமசிவம் ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் செய்தனர். சிஐடியு மாவட்ட செய லாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன், நிர்வாகி குணசேகரன், போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் குமார் கோவிந்தன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.