tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எம்.பி.,க்கள் குழு ஆய்வு

கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்திய நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை (செப்.30) நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாநிலத் தலைவர்  கு.செல்வப்பெருந்தகை, மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் ஆகியோ ரும் கூட்ட நெரிசல் பகுதியை ஆய்வு செய்தனர். இதனை  தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை யும் நேரில் சந்தித்து கே.சி.வேணுகோபால் ஆறுதல் கூறினார். இதேபோல், ஹேமமாலினி தலைமையில் என்டிஏ  கூட்டணி எம்.பி.,க்கள் குழுவும் ஆய்வு செய்தது.

 முன் ஜாமீன் கோரி  புஸ்ஸி ஆனந்த் மனுத் தாக்கல்

மதுரை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சா ரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல்  செய்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என  சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்த நிலை யில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த  வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் உட்பட 10 கட்சிகளுக்கு  தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததால் புதிய தமிழகம் உட்பட பத்து அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அனைத்து இந்திய எம்ஜிஆர், மக்கள் முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காம ராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி, என் இந்தியா கட்சி,  புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி - சிவ்ராஜ், தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய பத்து  அரசியல் கட்சிகள் 2021 முதல் கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இந்த கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கு முன்னதாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இக்கட்சிகள் குறிப்பிட்ட தேதிக்குள் எழுத்துப்பூர்வ மான அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் தமிழக தலைமை  தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும். பதில் வரா விட்டால் அக்கட்சிகளிடம் கருத்து இல்லை என கருதி, பதிவு பட்டி யலில் இருந்து நீக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்தன.

மாற்றுத் திறனாளிகளுக்கு  4 சதவீத இடஒதுக்கீடு அரசாணை

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக  அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர் கள் பணிபுரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு  நிலைகளிலும் 119 பதவி கள் மாற்றுத் திறனாளி களுக்கு ஏற்றவை என  அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை மாற்றுத் திற னாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது

‘அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக’

சென்னை: விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொ டங்கிவிட்டது பாஜக. கரூரில் நடந்த கொடூ ரத்தைப் பற்றி ‘உண்மை கண்டறியும் குழுவை’ அமைத்திருப்பது அரசி யல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.  பாஜகவின் சதியை முறி யடிக்க காங்கிரஸ் கட்சி யின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடு முறையை முன்னிட்டு (அக்.1 முதல் அக்.5 வரை) பொதுமக்கள் வெளி யூர் பயணம் மேற்கொள் வதைப் பயன்படுத்தி அதிகப்படியான கட்ட ணம் வசூலித்தால் நட வடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை  எச்சரிக்கை விடுத்து உள்ளது.  

தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென் னையில் உள்ள சிங்கப் பூர், கொரியா, சுவீடன், ஆஸ்திரேலியா, ரஷ்ய தூதரகங்களுக்கு மின் னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு  மிரட்டல் விடுத்துள்ள னர். மோப்ப நாய்கள்  உதவியுடன் தூதர கங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.