tamilnadu

img

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி,ஜூலை17- சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் 34வது மாநில மாநாடு புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் திருச்சி பிராட்டியூரில் நடந்தது. மாநாட்டின் முதல் நாள் செஞ்சட்டை பேரணி மற்றும்பொது மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு எஸ்.இ.டி.சி  மாநிலத் தலைவர் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை முன்னாள் பொரு ளாளர் என். சண்முகம் ஏற்றினார். டி.என்.எஸ்.டி.சி சம்மேளன துணைத் தலைவர் எம். கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலி தீர்மானத்தை என். முருகேசன் வாசித்தார். சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.  சவுந்தரராசன் துவக்க உரையாற்றி னார். முடிவில் உதவி செயலாளர் எஸ். சடகோபன் நன்றி கூறினார். இரண்டாம் நாளான வியா ழனன்று  நடந்த பிரதிநிதிகள் மாநாட்டிற்கு  எஸ்.இ.டி.சி மாநிலத் தலைவர் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் பி.ஆறுமுகம் வர வேற்புரை ஆற்றினார். ஸ்தாபன வேலை அறிக்கையை பொதுச் செய லாளர் எம்.கனகராஜ் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் எம்.ரவி சமர்ப்பித்தார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன்,டி.என்.எஸ்.டி.சி.  பொதுச்செயலாளர் ஜெ. மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில்அரசு விரைவு போக்குவரத்து கழக கும்பகோணம், தூத்துக்குடி, காரைக்குடி, திருநெல்வேலி பணிமனைகளின் தரைத்தளத்தை சிமெண்ட் தளமாக அமைத்து தர வேண்டும்.திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சேலம், நாகையிலிருந்து கழுவி சுத்தம் செய்து சென்னைக்கு செல்லும் பேருந்துகளை சென்னையில் கழுவ வேண்டாம்.டயர் பஞ்சர் பார்ப்பதற்கான கூலியை 300 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.நாகர்கோயில் பணிமனையில் ஆர்சி யூனிட்டை மீண்டும் திறக்க வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேருந்துகளில் பார்சல் போன்று பொருட்களை ஏற்றி அனுப்புவதை தடை செய்ய வேண்டும். சிறு,சிறு தவறுகளுக்கு தொழில்நுட்ப பணியாளர்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.விஜயராகவன், பி.சுதர்சிங் துணைத்தலைவர்கள் ஆர்.அருண், எஸ்.நடராஜன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக டபிள்யூ.ஐ. அருள்தாஸ், பொதுச்செயலாளராக எம். கனகராஜ், பொருளாளராக பி.  சிங்காரவேலு, துணை பொதுச் செய லாளர்களாக என்.முருகன், ஆர்.அருண், டி.எஸ்.ஜான்ராஜன், ஜி. விஜயராகவன் மற்றும் 14  துணை தலைவர்கள், 19 உதவி செயலாளர்கள், 50 பொதுக்குழு உறுப்பினர்கள், 50 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாநில உதவி செயலாளர் எஸ்.ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.