tamilnadu

img

காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உட்பட மாநில நிர்வாகிகளை தாக்கிய காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஷ் குமார், காவல் ஆய்வாளர் ராமர் ஆகியோரையும், சங்க கட்டிடத்தை கையகபடுத்த முயன்ற பிரிவினைவாதிகளும் கண்டித்து திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் பரிதிமாற் கலைஞன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் க.பிரபு, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பச்சையப்பன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில தலைவர் ராஜா, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் புனிதா, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ரகுபதி, மாவட்ட செயலாளர் பார்த்திபன், அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலப் பொருளாளர் இளங்கோ,   உள்ளிட்டோர் உரையாற்றினர். கள்ளக்குறிச்சியில் மாவட்டத் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   மாவட்டச் செயலாளர் அனந்தகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் சாமிதுரை நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில துணைத் தலைவர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் காஞ்சனாமேரி. ஆய்வக நுட்புனர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வீரபுத்திரன், சுகாதார ஆய்வாளர் சங்க மாநிலக் நிர்வாக குழு உறுப்பினர் குமாரதேவன் உள்பட  பலர் பேசினர்.