காட்பாடியிலிருந்து வேலூருக்கு நகரப்பேருந்துகளை இயக்கவேண்டும் அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட பேரவை வலியுறுத்தல்
வேலூர், அக் 12 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை வேலூர் நகர அரங்கில் மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் வேலை அறிக்கையும் மாவட்ட பொருளாளர் சுமதி, வரவுசெலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் ம.தேவ சேனன், தே.வேந்தன் மாவட்ட இணைச் செய லாளர் மு.இளந்தமிழன் மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ச.ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் ச.ஹேமச்சந்திரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முனை வர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் வே.விஜய குமரன் நிறைவுரை ஆற்றினார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.சபரிகிரி வாசன் நன்றி கூறினார். தீர்மானங்கள் பேரவையில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,7வது ஊதியக்குழு மாற்றத்தின் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் ஊர் புற நூலகர்கள் செவி லியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கால முறை ஊதியம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் மதிய உணவு அருந்த அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும், காட்பாடியிலிருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தர வசதி யாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்,சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
