அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அக்.16 முதல் தொடர் போராட்டம் அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக வேதனை
சென்னை, அக். 10- ஓய்வூதிய ஆய்வுக்குழுவின் காலத்தை நீட்டித்திருக்கும் அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக ஆசி ரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப் பான ஜாக்டோ ஜியோ தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம், புதன்கிழமை (அக்.8) அன்று சென்னையில் நடைபெற்றது. இதன்பின் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோவின் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவில்லை. நிதி நிலை சீரானவுடன் கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்றார். 28.4.25 அன்று சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று பேசிய முதலமைச்சர், சரண் விடுப்புத் தொகை வழங்கப்படும். ஓய்வூதியம் சம்பந்தமாக ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அறிக்கையின் முடிவை 30.9.2025-க்குள் பெற்று ஒய்வூ தியம் வழங்கப்படும் என்றுஅறிவித்தார். இந்த குழு முன்பு, சங்கங்கள் மட்டு மின்றி, ஜாக்டோ - ஜியோ பழைய ஒய்வூதியம் கோரிக்கை சார்பான அனைத்து ஆவணங்களையும் புள்ளி விபரங்களோடு சமர்ப்பித்தது. பழைய ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுமே தவிர இழப்பு கிடையாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம். ‘ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதி யம் வழங்குவோம்’ என்றுதான் முத லமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இக்குழு மீது அதிருப்தி இருந்தாலும், கால நீட்டிப்பு செய்திடாமல் 30.9.2025-க்குள் அரசுக்கு அறிக்கை வழங்க வலியுறுத்தினோம். ஆனால், இந்தக் குழு அறிக்கை அளிக்க கால நீட்டிப்பு வழங்கியிருப்பது மிகுந்த அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வலி யுறுத்தி அக்.16 அன்று கோரிக்கை அட்டை அணிந்து வட்டார அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அக்.27 - 31 வரை அனைத்துப் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களைச் சந்தித்து, போராட்டத்தின் அவசியம் குறித்தும், அதில் பங்கேற்பதன் அவசியம் குறித்தும் விளக்கி மாவட்ட அளவில் ஜீப் பிரச்சார இயக்கம் நடைபெறும். நவம்பர் 18 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும். இதற்கு பிறகும் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு செல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.