tamilnadu

img

அவுட்சோர்சிங் முறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

அவுட்சோர்சிங் முறை, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை  முற்றிலும் கைவிட அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக். 5-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் எம்.ஆர். அப்பன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர்.பால்பாண்டி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் வாசித்தார். மாநில  துணைத் தலைவர் பரமேஸ்வரி துவக்கவுரையாற்றினார்.  வேலை அறிக்கையை மாவட்டச் செயலா ளர் நவநீதன் வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சிவசங்கர் சமர்ப்பித்தார். மகளிர் துணைக் குழு அறிக்கையை மகளிர் துணைக்குழு அமைப்பாளர்(பொ) அமுதவள்ளி வாசித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் சுடலையாண்டி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  டிஆர்இயு திருச்சி கோட்ட செய லாளர் கரிகாலன், மேனாள் மாநில துணைத்தலைவர் பெரியசாமி, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீல கண்டன், குமாரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், சத்துணவு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களில் ஆண், பெண் பாகுபாடின்றி இருபாலரையும் பணியமர்த்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக வரைமுறை செய்து ஊதியம் வழங்க வேண்டும். அரசு  துறைகளில் தற்காலிக பணி நியமனம், அவுட் சோர்சிங் முறை, ஒப்பந்த அடிப்படை யிலான பணி நியமனம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸா வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.