tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பட்டுக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி பட்டுக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கம்

பாபநாசம், ஆக. 7-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில், அய்யம்பேட்டையை அடுத்த கணபதி அக்ரஹாரம் அருகே மெயின் சாலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. தீக்கதிர் செய்தி எதிரொலியாக திங்களன்று பேருந்து இயக்கத்திற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.  தஞ்சாவூரிலிருந்து, அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் செல்லும் பேருந்து பட்டுக்குடி வழியாக இயக்கப்பட்டது. தினமும் காலை, மாலை வேளைகளில் பேருந்து பட்டுக்குடி வந்து செல்லும்.  முன்னதாக பேருந்து இயக்கத்திற்காக தொடர் முயற்சியெடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், “தஞ்சாவூரிலிருந்து பட்டுக்குடிக்கு நேரடியாக பேருந்து இயக்க வேண்டும். குறைந்தது நான்கு முறையாவது பேருந்து பட்டுக்குடிக்கு வந்து செல்ல வேண்டும்” என்றனர்.