tamilnadu

img

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்கிடுக

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்கிடுக

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, அக்.7- தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி  தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான ஆண்டு போனசை, தீபாவளி  பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன் பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண் டும். பெட்டிக்கு ரூ.3.50 என ஒரே மாதிரி ஏற்றுக்கூலி என்பதை டெண் டர் படிவத்திலேயே உத்திரவாதப் படுத்த வேண்டும். எச்எல் என்ற  பெயரில் சுமைப்பணி தொழிலா ளர்களின் கூலியில் மாதந்தோறும் பணம் கட்டச்சொல்வதை தடுத்து  நிறுத்த வேண்டும். குடோன்களில் அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, நீலகிரி மாவட்டம், குன் னூர் வண்டிச்சோலை பகுதி யிள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத் கண்டன உரையாற்றினார். இதில் டாஸ்மாக் சங்க மாவட்டத் தலைவர்  ஜெ.ஆல்துரை, துணைச்செயலா ளர் லட்சுமணன், சிஐடியு மாவட்டப்  பொருளாளர் நவீன் சந்திரன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். இதன் பின் நீலகிரி மாவட்ட மேலாளரை  சந்தித்து சுமைப்பணி தொழிலாளர் கள் மனு அளித்தனர். கோவை கோவை மாவட்டம், பீளமேடு  அருகே உள்ள விளாங்குறிச்சியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் ஜஹாங்கிர் தலைமை வகித்தார். சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தின் பொதுச்செயலாளர் ஆர். ராஜன், மண்டலப் பொறுப்பாளர்  எம்.எஸ்.பீர் முஹம்மது ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர். முடிவில், அபுதாஹிர் நன்றி கூறினார். இதில், திரளான சுமைப்பணி தொழிலாளர்கள் பங் கேற்றனர். நாமக்கல்  நாமக்கல் டாஸ்மாக் குடோன்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், நாமக்கல் மாவட்ட டாஸ்மாக்  குடோன் சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பெருமாள் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு  மாவட்டச் செயலாளர் ந.வேலுச் சாமி, டாஸ்மார்க் சங்க செயலா ளர் முனியப்பன் ஆகியோர் உரை யாற்றினர். இதில், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி சங்க நிர்வாகி  செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.