tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பொது வேலை நிறுத்தம்:  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 11-  ஜூலை 9 அகில இந்திய பொதுவேலை நிறுத்தப் பேராட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மாநில முழுவதும் பங்கேற்ற நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேவியர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் பேராசிரியர்களும் ஈடுபட்டனர்.  குறிப்பாக, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட த.பே.மா.லு கல்லூரி, பூம்புகார் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, ஏடிஎம் கல்லூரி, காதர் மொகிதீன் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, கரந்தை கல்லூரி, ராஜாஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

உலக மக்கள் தொகை தினம்

இராமநாதபுரம், ஜூலை 11-  உலக மக்கள் தொகை தினம் 2025-ஐ முன்னிட்டு உறுதிமொழி மற்றும் நடமாடும் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில்  ஜூலை 11 அன்று  நடைபெற்றது.

அரசுபள்ளிக்கு ஆரோ வாட்டர், மின் விசிறி வழங்கல்

அறந்தாங்கி, ஜூலை 11-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த, காரணியானேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, முன்னாள் ஒன்றிய மாநில அமைச்சர் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் ஏற்பாட்டில் பள்ளிக்கு மின்விசிறிகள் மற்றும் சுத்திகரிப்பு ஆர்ஓ வாட்டர் மிஷின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், காரணியானேந்தல் ஜமாத் நிர்வாகத்தினர் மற்றும்ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.