எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்!
வணிகர் சங்க பேரவை கவலை சென்னை, மார்ச் 11- ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் சூழலால் இந்திய பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒன்றிய அரசு தகுந்த முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.சவுந்தர் ராஜன் கூறுகையில், “போர் எதிரொலி யால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளதால், உணவகங்கள், தேநீர் கடைகளை மூடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் உணவின்றி தவிப்பதோடு, பணியாளர்கள் வருவாய் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்கள், வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வா தாரம் பாதிப்புக்குள்ளாகும், பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். பெட்ரோலியப் பொருட்களை நம்பி யுள்ள பாலிதீன் உள்ளிட்ட இதரப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் போரினால் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே விலை நிலைத்தன்மையை அரசு பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் சாதாரண ஏழை-எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவர். அதேபோல் போர் நடைபெறும் பகுதிகளில் தங்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர வும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச அமைதி போர் விலை மதிக்க முடியாத உயிர்களை அழித்தொழிக்குமே தவிர, போரின் மூலம் எந்த பிரச்சனைக்கும் இது வரை தீர்வு ஏற்பட்டதில்லை என்பது வர லாற்று உண்மை. உலக அமைதியை நிலை நிறுத்தவும், மனிதாபிமான மாண்புகளைக் காக்கவும் ஒன்றிய அரசு தனது தூதரக ரீதி யிலான சர்வதேச முயற்சிகளைத் தொடர வேண்டும். சிறு, குறு மற்றும் அனைத்து தொழில்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு, தேவையான பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
