tamilnadu

கேங்மேன்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கேங்மேன்கள் போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை, அக். 10 - கேங்மேன்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைமையில் அக்.7 முதல் 12 தலைமை பொறியாளர் மண்டல அலு வலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தனர். அக்.8 அன்று வாரிய நிர்வாகம் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. கேங்மேன் பணியாளர்களை கள  உதவியாளர்களாக மாற்றுவது தொடர்பாக வாரியத்தின் கடந்த கால வழிமுறைகள் மற்றும் பணி விதிகள் அடிப்படையில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு முன்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 1.12.2019 முதல் கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை 6 சதவீதம் வழங்கிட துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். கேங்மேன் பணியாளர்கள் கல்வித் தகுதி அடிப்படையில் உள்முகத்தேர்வில் அனுமதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விருப்ப இடமாறுதல் கோரும் கேங்மேன் பணியாளர்கள் அனை வருக்கும் விரைவில் உத்தரவு வழங்கப் படும் என நிர்வாகத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. உத்தரவாதங்களை நிர்வாகம் செயல் படுத்த தவறுமெனில் மீன்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி. ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.