states

img

ஸ்கேன் இந்தியா

மீண்டும் ராமர்..!

தேர்தல் உத்திகளை உருவாக்கித் தரும் ஐ- பேக் நிறுவனத்துடன் சமாஜ்வாதிக் கட்சி  ஒப்பந்தம் போட்டிருக்கிறது. 2027ஆம் ஆண்டில்  உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற வுள்ளது. மக்களவைத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதால், சட்டமன்றத் தேர்தலை உற்சாகமாக சமாஜ்வாதிக் கட்சி எதிர்கொள்கிறது. தற்போது மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு தேர்தல் உத்தி களை இந்த நிறுவனம் வகுத்துக் கொடுத்து  வருகிறது. அது முடிந்தவுடன் உத்தரப்பிர தேசத் தேர்தலில் கவனம் செலுத்தப் போகி றார்கள். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லில் இந்த நிறுவனத்தை அமர்த்திக் கொண்டு தான் பாஜக களம் கண்டது. மீண்டும் ராமரிடம்  அடைக்கலம் கொள்ளலாமா என்று பாஜக வினர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் கள்.

மீண்டும் அவலம்..!

திரிபுராவில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட 10 ஆயிரத்து 323 ஆசிரியர்களின் நிலைமை  படுமோசமாகியுள்ளது. இடது முன்னணியின் ஆட்சிக்காலத்தில் இவர்கள் பணி அமர்த்தப் பட்டனர். ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கை  முடிவுகளில் தலையிட மாட்டோம் என்று பல  பிரச்சனைகளில் சொல்லும் நீதிமன்றங்கள், இடது முன்னணியின் இந்தப் பணி நிய மனங்களை ரத்து செய்தன. பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன பாஜக, ஆட்சிக்கு  வந்தும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. தொடர் போராட்டத்தில் நீக்கப்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக, இரண்டு ஆசிரியர்களின் மரணம் உலுக்கி எடுத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித நிவா ரணைத்தை அளிக்கவும் பாஜக அரசு மறுத்து வருகிறது.  

மீண்டும் சான்றுகள்..!

அனைவருக்கும் கல்வி மற்றும் குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை ஆகிய அம்சங்களை முன்வைத்து சமூ கப் பணிகளை கைலாஷ் சத்யார்த்தி செய்து வருகிறார். குழந்தைகளைச் சுரண்டுவதற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் அவர் போராடி வரு வதை அங்கீகரிக்கும் வகையில் அவ ருக்கு அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டது. அவருடைய அலு வலகம் தில்லியில் உள்ள கல்காஜி யில் இருக்கிறது. அந்த அலுவலகத்திற்  குள் மர்ம நபர்கள் நுழைந்து, பல்வேறு  முக்கியமான ஆவணங்களை எடுத்துச்  சென்றுள்ளனர்.  யார், எதற்கான என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் தில்லி காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்  குலைவுக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று என்று எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளன.