மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் எஸ். தயாநிதி மறைவு!
சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல் சென்னை, மார்ச் 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் - திருப்பத் தூர் மாவட்டக்குழுவின் முன்னாள் செயலாளராகவும், தற்போதைய மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர் எஸ். தயாநிதி (வயது 63) அவர்கள் ஞாயிறன்று திடீரென கால மானார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியையும், துயரத்தை யும் அளிக்கிறது என்றும், அவ ரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றும், கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள செய்தி யில் கூறியுள்ளார். இரங்கல் அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது: தோழர் எஸ். தயாநிதி மதுரையைச் சேர்ந்தவர். 1980 துவக்கத்தில் மதுரை மாநகரில் காக்கா தோப்பு பகுதியில் வாலிபர் சங்கத்தில் இணைந்து ஜெய்ஹிந்த்புரம் பகுதி செயலாளராக பணி யாற்றியவர். ஐ.டி.ஐ. ஃபிட்டர் படிப்பை முடித்த அவருக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலை யத்தில் வேலை கிடைத்து ஊழி யராகப் பணியில் சேர்ந்தவர். பின்னர் வேலூரில் கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு வாலி பர் சங்கத்தையும், கட்டுமா னம், ஆட்டோ, விவசாயிகள் சங்கத்தை கட்டுவதிலும் அரும்பாடுபட்டவர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர், கட்டு மானம், ஆட்டோ, விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் பிறகு வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து கட்சி யை கட்டுவதில் முன்னணி பாத்திரம் வகித்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் வழங்கி மனித உயிர்களைக் காப் பாற்றியவர். தேர்தல் காலங் களில் அவரது சுவரெழுத்துப் பணி அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் முத்திரை பதிக்கும். கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் ஓய் வில் இருந்து வந்தவர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரி ழப்பாகும். அவரது உடல் மருத்துவ மாணவர்கள் பயன் பாட்டிற்காக அரசு மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்படவுள்ளது. அவரது மறைவால் துய ருற்றுள்ள அவரது இணைய ரும், கட்சியின் வேலூர் - திருப் பத்தூர் மாவட்டச் செயலாள ருமான தோழர் எஸ்.டி. சங்கரி அவர்களுக்கும், மகளுக்கும், குடும்பத்தினருக்கும், வேலூர் மாவட்ட தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
