tamilnadu

காமேனி படுகொலை இந்திய நகரங்களில் போராட்டம்

காமேனி படுகொலை இந்திய நகரங்களில் போராட்டம்

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்  லப்பட்டதைக் கண்டித்து இந்தி யாவின் முக்கிய நகரங்களில் ஞாயிறன்று  போராட்டங்கள் மற்றும் கண்டன ஊர் வலங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் மிகப்பெரிய அளவில் போராட்டங் கள் வெடித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கருப்புக்கொடி ஏந்தி வீதிகளில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரே லுக்கு எதிராக முழக்கமிட்டனர். மஜ்லிஸ்-ஏ-உலமா-ஏ-ஹிந்த் போன்ற அமைப்புகள் இந்தத் தாக்குதலை “மனி தாபிமற்ற செயல்” எனக் கண்டித்துள் ளன. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பழைய நகரப் பகுதிகளில் இளைஞர்கள் திரண்டு  காமேனியின் படங்களை ஏந்தி ஊர்வல மாகச் சென்றனர். காஷ்மீர் பள்ளத்தாக் கின் சில பகுதிகளில் தன்னிச்சையாகக் கடைகள் அடைக்கப்பட்டன. தில்லியில் சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி மாணவர் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. சர்வதேச விதிகளை மீறி ஒரு நாட்டின் தலைவரை அமெரிக்கா கொன்றது உலக அமைதிக்கு ஆபத்தா னது என அவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பகுதிகளில் கண்டனக் கூட்டங் கள் நடைபெற்றன. அதே போல பழைய  நகரப் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு வெளியே மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சென்னை, மதுரை, தேனி என தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் ஈரான் தலைவர் காமேனி படுகொலையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றன. கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு  பெரும் சிக்கல்? மத்திய கிழக்கில் நிலவும் போர்  பதற்றம் காரணமாக ஹார்முஸ்  நீரிணை வழியை ஈரான் மூடியுள்  ளது.  உலகளாவிய எண்ணெய் விநியோ கத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஹார்  முஸ் நீரிணை வழியாகவே நடைபெறு கிறது என்ற நிலையில், உலகின் முன்  னணி கப்பல் போக்குவரத்து நிறுவன மான மேர்ஸ்க் (Maersk), ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தனது அனைத்து சரக்குப் போக்குவரத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவ தாக அறிவித்துள்ளது. ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் பதிலடி ஆகிய வற்றால் ஹார்முஸ் நீரிணைப் பகுதி போர் முனையாக மாறியுள்ளதால் இந்த  முடிவை எடுத்துள்ளோம் என மேர்ஸ்க்  (டென்மார்க் நிறுவனம்) அறிவித்துள் ளது. உலகளவில் சுமார் 15% சரக்குக் கண்டெய்னர்களை கையாளும் மிகப் பெரிய நிறுவனம் மேர்ஸ்க் என்பதால், அந்நிறுவனத்தின் முடிவு சர்வதேச வர்த்த கத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக மேர்ஸ்க் மற்றும் பிற நிறுவனங்களின் இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.