tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 நாட்கள் வீட்டுக்குள் சிறை வைத்து மிரட்டிய கும்பல் மருத்துவரிடம் ரூ.3 கோடி சுருட்டல்

கோவை, ஜூலை 13- மும்பை போலீஸ் டிஜிட்டல் கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகக்கூறி, கோவையைச் சேர்ந்த மருத்துவரை இரண்டு நாட்கள் வீட்டுக்குள் சிறை  வைத்து மிரட்டி ரூ.3 கோடி மோசடி  செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் பண மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதில் ஈடுபடும் கும்பல், மும்பை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர் கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு,  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டு கின்றனர். இதை உண்மை என்று நம்பி  அவர்களிடம் பேசும் நபர்களை மிரட்டி  கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி வருகின்றனர். பின்னர் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த பலர் காவல் நிலை யத்தை நாடுகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஒரு வர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.3 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், கோவையைச் சேர்ந்த மருத்துவருக்கு மும்பையிலிருந்து ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பையில் சைபர் கிரைம் போலீசார் என்றும், உங் களுக்கு மோசடி கும்பலுடன் தொடர் புள்ளது; ஆன்லைன் மோசடியில் ஈடு பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம் நீங்கள் வீட்டை விட்டு  வெளியே செல்லக்கூடாது, யாரிடமும் செல்போனில் பேசக்கூடாது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும்,  நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் வீட்டில் உள்ள மற்றவர்கள் மீதும் கைது  நடவடிக்கை பாயும் என்றும் அந்த கும் பல் மிரட்டியுள்ளது. இதனை நம்பிய மருத்துவர் வீட்டிலுள்ள அறையில் முடங்கிக் கிடந்ததுடன் மோசடி கும்பல்  கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2 கோடியே  90 லட்சம் ஆன்லைன் மூலம் அனுப் பியுள்ளார். இதற்கிடையே வேறொரு வழக்கு தொடர்பாக மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளை தமிழக சைபர் கிரைம் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அப்பொழுது அதில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு கோவை மருத்துவர் வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக கோவை காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் சனியன்று மருத்துவர் வீட்டிற்கு சென்றபோது தான், மருத்துவர் இரண்டு நாட்களாக அறையில் முடங்கிக் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது, என்றனர்.

கனமழையால் பெருக்கெடுத்த மழைநீர்

உதகை, ஜூலை 13- கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் நீண்ட நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக் கம் குறைந்து, அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை  பெய்து வந்தது. இந்நிலையில், ஞாயிறன்று காலை முதல்  வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், மாலை  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இத னால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய தால், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ திக்குள்ளாகினர்.

கஞ்சா விற்பனைக்கு சிறுவர்களைப்  பயன்படுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது '

நாமக்கல், ஜூலை 13- எருமப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ய சிறுவர் களைப் பயன்படுத்தியவா் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சேர்ந்த முகம்மது  அப்துல்லா (35) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக் கில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்  மீது தலா மூன்று வழிப்பறி வழக்குகளும், கஞ்சா வழக்கு களும் நிலுவையில் உள்ளன. இவர் நாமக்கல் பகுதியில் பெற் றோர் அரவணைப்பில் இல்லாத மாணவர்கள் மற்றும் இளை ஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, அவர்களை கஞ்சா விற்க பயன்படுத்தியது தெரியவந்தது. அதன்பேரில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். தனராசு ஆகியோர் பரிந்துரையின் பேரில் முகம்மது அப்துல் லாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவிட்டார். இதைய டுத்து, சேலம் மத்திய சிறை நிர்வாகத்திடம் குண்டர் தடுப் புச் சட்டத்தில் முகம்மது அப்துல்லாவை கைது செய்வ தற்கான ஆணையை மதுவிலக்கு பிரிவு போலீசார் சனியன்று வழங்கினர்.

62 ஆண்டுகளுக்குப்பின் மாணவர் சந்திப்பு

கோவை, ஜூலை 13- கோவையில், 62 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மாண வர் சந்திப்பில், 80 வயதைக் கடந்த மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர். கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங் கிலோ இந்தியன் பள்ளி நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி  வருகிறது. இப்பள்ளியில் 1961 ஆம் ஆண்டு பயின்ற மாண வர்கள், 62 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வில் ஒன்று கூடினர். இந்நிகழ்வில் 80 வய தைக் கடந்த 15 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் பழைய  நினைவுகளை மீட்டெடுத்தனர்.