tamilnadu

img

காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காந்தி மார்க்கெட் சுமைப்பணி  தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

திருச்சிராப்பள்ளி, ஆக. 22-  திருச்சி காந்தி மார்க்கெட் சேகர் பிரதர்ஸ் லாரி புக்கிங் ஆபீஸ், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக வழங்கி வந்த கமிஷன் கூலியை நேரடியாக தர முடியாது என சொல்லாமல், மறைமுகமாக ஜி.எம். லாஜிடிக்கல் என்ற பெயரில் லாரி ஷெட் உருவாக்குவதையும், 25 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரியும் 12 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்குவதை வேடிக்கை பார்க்கும் காவல்துறையை கண்டித்தும், சிஐடியு, எல்எல்எப், டியுசிசி, காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், வெள்ளி அன்று காந்தி மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் சங்கச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு லாரிஷெட் சங்க தலைவர் சதாசிவம், பொருளாளர் மூர்த்தி, தக்காளி மண்டி சங்கச் செயலாளர் சுப்பிரமணி, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார், தலைவர் ரமேஷ், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், துணைச் செயலாளர் மணிமாறன், எல்.எல்.எப் நிர்வாகி பாஸ்கர், டியுசிசி பொருளாளர் குமார் ஆகியோர் பேசினர். இதில் லாரி புக்கிங் ஆபீஸ் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.