tamilnadu

img

நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பா.சக்திவேல் படத்திறப்பு - புகழஞ்சலி

நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க முன்னாள்  மாநிலத் தலைவர் பா.சக்திவேல் படத்திறப்பு - புகழஞ்சலி

தஞ்சாவூர், அக்.13 -  தஞ்சாவூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம், மாநில மையம் சார்பில், சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஆட்சி அலுவலர் (பணி ஓய்வு) மறைந்த பா.சக்திவேல் படத்திறப்பு - புகழஞ்சலி நிகழ்ச்சி பெசன்ட் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.  மாநிலத் தலைவர் மா.தங்கமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்மணி, உதவிக் கோட்டப் பொறியாளர் எஸ்.ராம் பிரபு, டாக்டர் எஸ்.ராம்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார்.  சிபிஎம் மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்  சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தி.புருஷோத்தமன், மாநில துணைத் தலைவர் மோகன்ராஜ், மண்டலச் செயலாளர் சுப்பையா சண்முகம், மாவட்டத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.கோவிந்தராசு, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன், ஒன்றிய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் பெ.அறிவழகன் நன்றி கூறினார்.