tamilnadu

img

12 பேரை கொன்ற ‘ராதா கிருஷ்ணன்’ யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

12 பேரை கொன்ற ‘ராதா கிருஷ்ணன்’ யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

உதகை, செப்.24- கூடலூர் அருகே கடந்த 10 ஆண்டுகளில் 12 பேரை கொன்ற ‘ராதா கிருஷ்ணன்’ என்ற யானை  நீண்ட போராட்டத்திற்கு பின்பு  மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட் டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில்  ‘ராதா கிருஷ்ணன்’ என்ற யானை யால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து  வந்தனர். ஒரே மாதத்தில் இரண்டு  பேரை தாக்கிக் கொன்ற இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பி னர் கோரிக்கை விடுத்தனர். கடந்த  10 ஆண்டுகளில் 12 பேரை கொன்ற  இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த  செப்.15 ஆம் தேதி முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராஜேஷ் குமார் டோக்ரா, ராதா கிருஷ்ணன் யானையை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பிறகு நூற் றுக்கும் மேற்பட்ட வனத்துறையி னர் நான்கு கும்கி யானைகள் உதவி யுடன் டிரோன் மற்றும் தரை வழி யாக யானையை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த செப்.16ஆம் தேதி முதல்  இன்று வரை 8 நாட்களாக யானை யைப் பிடிக்க வனத்துறையினர் கடும் சவாலை மேற்கொண்டனர். ஓவேலி எல்லைமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் காபி,  தேயிலைத் தோட்டங்களில் பதுங் கிக்கொண்ட யானையை மயக்க  ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு  இடங்களில் பரன்கள் அமைக்கப் பட்டு, அதில் வன கால்நடை மருத்து வர்கள் இரண்டு பேர் தனிக்குழு வாக யானைக்கு மயக்க ஊசி செலுத்த காத்திருந்தனர்.  இந்நிலையில், திங்களன்று யானையை மிக நெருங்கி சென்ற போது ஆக்ரோஷமுடன் காணப் பட்ட யானை பள்ளத்தாக்கான பகுதியில் ஆட்டம் காட்டியது. இத னால் மயக்க ஊசி செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் கும்கி யானைகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் சந்தன மலைக்கு திரும்பி சென்றன. தொடர்ந்து, செவ்வாயன்று அதிகாலை 5 மணி முதல் மீண்டும் ராதாகிருஷ்ணன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த வன கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் தயார் நிலையில் பரண்  மீது ஏறிக்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட வனத்துறை யினர் யானையை சுற்றி வளைக்க பல்வேறு திட்டங்களை வகுத்து பட்டாசுகள் வெடித்து பரன் இருக் கும் இடத்திற்கு யானையை கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் யானை இருந்த பகுதியில்  கடும் பனிமூட்டம் மற்றும் மழை  பெய்ததால் மயக்க ஊசி செலுத்து வதில் மீண்டும் தாமதம் ஏற்பட் டது. ஒரு வழியாக, யானையின் நட மாட்டத்தையும் யானைக்கு மயக்க  ஊசி செலுத்த வனத்துறையினர் திட்டமிட்ட இடத்திற்கு யானையை கொண்டு வந்து, மயக்க ஊசி வெற்றிகரமாக ராதாகிருஷ்ணன் யானைக்கு செலுத்தப்பட்டது. முதல் மயக்க ஊசி செலுத்திய பின்பு ஆக்ரோஷமாக பல இடங்க ளில் ஓடிய யானைக்கு இரண்டாம்  மயக்க ஊசியும் சரியாக செலுத்தப் பட்டது. இதனால் மயக்க நிலைக் குச் சென்ற யானை ஒரே இடத் தில் நின்றது.  இதன்பின் கும்கி யானைகள் உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானை மரக்கூண்டு லாரியில் ஏற் றப்பட்டு, முதுமலை அபயாரண் யம் முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டது. ரேடியோ காலர் பொருத் தப்படும் இந்த யானை, 21 நாட் கள் மரக்கூண்டில் வைக்கப்பட்டு அதன் பின்பு தாக்குதலுக்கான மன நிலை மாற்றப்பட்டு வனப்பகுதிக் குள் விடப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர். கடந்த 8  நாட்களாக வனத்துறையினர் மேற் கண்ட முயற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு யானை பிடிபட்ட தால், ஓவேலி பகுதி மக்கள் நிம் மதியடைந்துள்ளனர்.