tamilnadu

img

தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : வியாபாரிகள் மகிழ்ச்சி

தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு : வியாபாரிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில், அக். 19- தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தீபாவளி பண்டிகையை மற்றும் ஐப்பசி மாத முதல் சுப முகூர்த்த தினம், தொடர் சுபமுகூர்த்த தினங்கள் உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. இதில், மல்லிகை பூ கிலோ ரூபாய் 2500க்கும்,பிச்சிப்பூ ரூபாய் 1750 க்கும் விற்பனையாயின-அதேபோன்று அரளிப்பூ ரூபாய் 250,வாடாமல்லி ரூபாய் 250,கிரேந்தி ரூபாய் 50,சம்பங்கி ரூபாய் 100,முல்லை ரூபாய் 1500, ரோஸ் 150,மரிகொழுந்து100,செவ்வந்தி 100, துளசி 50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது,  பொதுமக்களும் வியாபாரிகளும் மலர் சந்தையில் கூடியுள்ளதால் விற்பனை களைக்கட்டியது.