tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளைகளில் கொடியேற்றம்

தமிழ்நாடு விவசாயிகள்  சங்க கிளைகளில் கொடியேற்றம்

அரியலூர், செப். 22-  அரியலூர் மாவட்டத்தில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பாளர்கள் என அரசால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதாக செய்திகள் பரவலாக்கப்பட்டு, மக்கள் மன உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மேலும், வீட்டுவரி, தண்ணீர் வரி ரத்து செய்யப்பட்டு, நூறு நாள் வேலையும் மறுக்கப்பட்டன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் விருப்பப்பட்டு இணைந்தனர்.  இதன்படி, அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் மற்றும் ஆண்டிமடம் வட்டம், மருதூர் தஞ்சாவூரான் சாவடி, வாரியங்காவல் புதுக்குப்பம் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கீழ குடியிருப்பு - மீன்சுருட்டி ஆகிய கிராமங்களில், கடந்த காலங்களில் நீர்நிலை புறம்போக்கு என தவறாக பதிவானதை மறு ஆய்வு செய்து, வகை மாற்றம் செய்து பட்டா கேட்டு கடந்த மாதங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.  இதனடிப்படையில், செப். 21 அன்று நாகமங்கலத்தில் கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கிளைச் செயலாளர் கமலக்கண்ணன், பொருளளர் கவிதா மற்றும் மேகராஜன் தலைமையில் விவசாயிகள் சங்க கொடி ஏற்றப்பட்டது.  அதேபோல், மருதூர் கிராமத்தில் கிளைத் தலைவர் நீலமேகம், கிளைச் செயலாளர் சங்கர், பொருளாளர் இளையராஜா தலைமையிலும், தஞ்சாவூரன் சாவடியில் கிளைச் செயலாளர் ஜெரோம், பொருளாளர் செல்வராசு, து.தலைவர் ஏசுதாஸ், து. செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலும் கொடி ஏற்றப்பட்டது.  மீன்சுருட்டி அண்ணா நகரில் கிளை தலைவர் இந்திரா, கிளைச் செயலாளர் எம். கலியமூர்த்தி, பொருளாளர் கே. செல்வி, துணைத் தலைவர் பி.சரோஜா, துணைச் செயலாளர் பாண்டியன் என நிர்வாகிகள், கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ் மாவட்டச் செயலாளர் இரா.மணிவேல், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஏ.கந்தசாமி, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் ஆர். இளவரசன், மாவட்ட நிர்வாகி சி. தியாகராஜன், தீண்டமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பத்மாவதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. பரமசிவம், சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் மைதின் ஷா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என். அருணாசலம் ஆகியோர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.