tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த  மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 4 - புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த  30.6.2025 அன்று நான்கு நபர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்ற கொடிகுளம் கிராமம், ராமநகரைச் சேர்ந்த  மந்திரமூர்த்தி (30) எதிர்பாராத விதமாக கடலில் தவறி  விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் மந்திர மூர்த்தியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக் கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

சமூக நல்லிணக்க ஊராட்சி  விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூலை 4 - அரியலூர் மாவட்டத்தில் “சாதி பாகுபாடற்ற சமூக  நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப் பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதியுள்ள 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லி ணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப் படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டிற்கான சமூக  நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன், அதற்குரிய ஆவணங்க ளையும் இணைத்து இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம். அல்லது அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண் ணப்பங்களை 7.7.2025 அன்று மாலை 5.45 மணிக்குள்  அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூர், ஜூலை 4 - சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25  கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்  ஆகியவற்றை காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அரியலூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மையத்தை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன், வரு வாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் முத்து லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநங்கைகளுக்கு குறைதீர் முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 4 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,  திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் வெள்ளியன்று  புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 24.6.2025 அன்று நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்டிருந்த கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, 7  திருநங்கைகளுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றி தழ்களும், 3 திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளும், ஒரு திருநங்கைக்கு மின்னணு குடும்ப அட்டையும், 3 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப் பட்டன. இந்த சிறப்பு முகாமில், 60 திருநங்கைகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.