tamilnadu

img

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய நிதியமைச்சர்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய  நிதியமைச்சர்

திருச்சுழி, அக்.10- விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில்   “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்  மாவட்ட ஆட்சியர்  சுகபுத்ரா   தலை மையில் நடைபெற்றது. இதில் தமிழக  நிதி- சுற்றுச் சூழல்,காலநிலை மாற்றத் துறை அமைச்சர்   தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பய னாளிகளுக்கு  வழங்கினார். அப்போது அமைச்சர் கூறுகையில்,  இம்முகாம்க ளில் மகளிர் உரிமைத் தொகை கோரி பெரும்பா லான  பெண்கள் மனுக்கள் வழங்கியுள்ளனர். அதே போல, பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தோர்  இம் முகாம்களிலேயே தீர்வு காணலாம். பெயர் மாற்றப் பணிகள், சரிபார்த்தல் பணிகள் என அனைத்து வகையான மனு க்களுக்கும்  தீர்வு காணப் பட்டு வகிறது என  தெரி வித்தார். மேலும், திருச்சுழியில்  புதிய பேருந்து நிலையம், சமத்துவபுரம் மற்றும் கல்லூரி போன்றவைகளும், சித்தலக்குண்டு அருகில் பள்ளியும், கிராமத்தைச் சுற்றி ஐடிஐ-தொழில்நுட்பக் கல்லூரியும் அமைக்கப் பட்டுள்ளது. இதனால், இப் பகுதி பல்வேறு வளர்ச்சி களை பெற்று வளர்ந்துள் ளது. இதற்கு தமிழக முதல்வ ரின்  பங்கு மிக முக்கியமான தாகும் என்றுத் தெரி வித்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் வீ.கேசவதாசன், முன்னாள் ஒன்றிய சேர்மன் பொன்னுத்தம்பி,  வட்டாட்சி யர்  உட்பட பலர் பங்கேற்ற னர்.