புழல் சிறையில் காவலர் மீது பெண் கைதி தாக்குதல்
சென்னை, ஜூலை 13- புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ள வெளிநாட்டுக் கைதி மோனிகா பெண் காவலரை தாக்கியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தாக்குதலில் காய மடைந்த பெண் காவலர் சரஸ்வதி கூறியதாவது: புழல் சிறையில் வெளிநாட்டு சிறைவாசிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவலர்கள் தான் சிறைவாசி போல் வாழும் நிலை உள்ளது. இதற்கு சிறைத்துறை தலைவர்தான் காரணம். தமிழ்நாட்டை சேர்ந்த கைதிகள் ஏதாவது குறைகளை கூற முயன்றால் விரட்டி விடுகிறார். ஆனால் வெளிநாட்டு கைதிகள் செல்போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்களுக் கான தண்டனை வேண்டாம் என சிறைத்துறை தலைவர் கூறுகிறார். வெளிநாட்டு கைதிகளுக்கு வெளி நாட்டு உணவு வழங்கப்படுவதுடன், சிறைக்குள் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். இரவு நேரங்களில் வெளிநாட்டு கைதிகள் அனைவரும் நிர்வாணமாக தூங்குகின்றனர். இவங் களை பார்த்து தமிழ்நாட்டு கைதி களும் நிர்வாணமா தூங்குவதும், சுற்றித்திரிவதுமாக உள்ளனர். மேலும், இவர்கள் லெஸ்பியன் உறவும் வைத்துக் கொள்கின்றனர். மற்ற கைதிகளும் ஆபாசமான முறை யில் நடந்து கொள்கின்றனர். அவர் களை கண்டித்தால், என்னை ஏன் கேக் குற அவங்களை கேட்டியா? என்று எதிர்த்து பேசுகின்றனர். இதற்கு எல்லாம் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா என்ற கைதி தான் காரணம். அவரை கண்டித்தால் கூடுதலாக இரண்டு வாய்தா அட்டன் பண்ண வேண்டி இருக்கும் அவ்வளவுதானே என்று சாதாரணமாகக் கூறுகிறார். தற்போதுவரை, கைதி மோனிகா 4 காவலர்களை தாக்கி உள்ளார். இதில் ஒரு பெண் காவலர் மோனிகா மீது புகார் கொடுத்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அந்த பெண் காவலர் வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டார். என்னை ஒரு முறை அறையில் வைத்து மோனிகா பூட்டி விட்டார். பின்னர், விஜயசாந்தி என்ற காவலர் தான் அறையை திறந்து என்னை மீட்டார். எனவே, வெளிநாட்டு கைதி களை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளால் மற்ற கைதிகளும் அத்துமீறி செயல் படுகின்றனர். இவர்களுக்கு சிறைத் துறை தலைவர் மகேஸ்வர் தயால் ஆதரவு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். புழல் சிறைக்குள் வெளி நாட்டு கைதிகளுக்கு மட்டும் பியூட்டி பார்லர் உள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு கைதி களிடம் கேட்டால் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு கைதி மோனிகாவின் பெண் நண்பர் ஒருவர் திருச்சி சிறைக்கு மாற்றப் பட்டார். அவருக்கு சிறைத்துறை தலை வர் பரிசு கொடுத்து அனுப்பி வைக் கிறார். புழல் சிறையில் அனைத்து பகுதி களிலும் கேமராக்கள் இருக்கும் நிலை யில் மோனிகா தங்கி இருக்கும் பகுதி யில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் மோனிகாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக் கிறது. சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயாள் அவளுக்கு பல்வேறு ஆதரவுகளை வழங்கி வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் காவலர்களை கைதிகள் மதிப்பதில்லை என்று தெரிவித்தார்.