வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 5- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக் குழு சார்பில், பணி நேரத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திடு மாறும், வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்ட னைகள் வழங்கிட சிறப்பு பணி பாது காப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பொது மக்க ளுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மோகன்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட தணிக்கையாளர் கே.செல்லமுத்து, வருவாய்த்துறை கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் முருகேசன், அழகர்சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.எஸ். அன்பழகன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயவேல் காந்தன் நன்றி கூறினார்.
