tamilnadu

img

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

மனித உரிமை அமைப்புகளை முடக்கவே எப்சிஆர்ஏ திருத்தம்!

கொச்சி, ஏப். 2 -  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்ட (FCRA) திருத்தமானது, மதச் சிறுபான்மையினரை மட்டு மல்லாது, சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் குறி வைப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார். எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் வியாழனன்று நடைபெற்ற ‘தலை வருடன் சந்திப்பு’ (Meet the Leader) நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை வெளிச்சத் திற்குக் கொண்டு வருபவர்களை ஒடுக்குவதே எப்சிஆர்ஏ சட்டத்  திருத்தத்தின் நோக்கம். முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் தன்னார்வ அமைப்பு களின் ஒட்டுமொத்தச் சொத்துகளை யும் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. ஆனால், நாட்டில் வகுப்புவாதக் கலவரங்களையும் வன்முறைகளையும் தூண்டிவிடும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத எதிர்ப்பே இடதுசாரிகளின் நிலைப்பாடு கேரளத்தில் இடதுசாரிகளே இல்லை என்று ராகுல் காந்தி  கூறுவது, அவருக்குப் பிரச்சனை களைப் பற்றிய ஆழமான புரிதல் இல்லாததையே காட்டுகிறது. இடதுசாரிகள் எப்போதுமே மக்கள் நலன் சார்ந்த பொருளா தார மற்றும் சமூக மாற்றங் களுக்காகப் பணியாற்றுபவர்கள். வகுப்புவாத நிலைப்பாடு கொண்ட வர்களுடனோ அல்லது அத்தகைய செயல்பாடுகளைக் கொண்டவர் களுடனோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது எல்டிஎப் (LDF) ஒருபோதும் ஒத்துப்போகாது. கேரளத்தில் காங்கிரசும் யூடிஎப்-உம் தான் மதவாத மற்றும்  வகுப்புவாத சக்திகளுடன் பகிரங்க மாகத் தேர்தல் கூட்டணி வைத்துள் ளன. தற்போது வரவிருக்கும் தேர்தலுக்காக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலும் காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டு வருகின்றன. இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித் தார்.