tamilnadu

img

பொன்னேரியில் 4 வாய்க்கால்களை தூர்வார வேண்டும்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரியில் 4 வாய்க்கால்களை  தூர்வார வேண்டும்!  

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

அரியலூர், ஜூலை 18-  பொன்னேரியில் நான்கு வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்திட, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல் கோரிக்கை வைத்தார்.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இரா. மணிவேல் கீழ்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.  பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல, ஒன்றிய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதால் விவசாயிகள் பாதிப்படைவதுடன், மாங்காய் உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்து வருகிறார்கள். கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு நகை கடன், பயிர் கடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இலவச பம்பு செட் மின் இணைப்பு கட்டாப்பு தேதி அறிவிக்க  வேண்டும். உட்கோட்டை விளாங்குளம் ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்தி கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.