tamilnadu

img

விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, உரங்கள் தட்டுப்பாடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, உரங்கள் தட்டுப்பாடு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர், செப்.19- விருதுநகர் மாவட்டத் தில் விவசாயத்திற்கு தேவை யான உரம் மற்றும் யூரியா ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு உள்ளதாக குறைதீர் கூட்டத்  தில் விவசாயிகள் புகார் தெரி வித்தனர். மாவட்ட  விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர்  ராஜேந்தி ரன், சிவகாசி சார் ஆட்சியர்  முகமது இர்பான், மேக மலை புலிகள் காப்பக துணை  இயக்குநர் முருகன், வேளாண் இணை இயக்குனர் சுமதி, தோட்டக்கலைத்துணை இயக்குநர் சுபா வாசுகி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.   அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: விருதுநகர் மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு உள்ளது. உரம் வந்தவுடன்  அதில்  70 சதவிகதத்தை  வேளாண் கூட்டுறவு சங்  கங்கள் மூலம் விவசாயி களுக்கு முறையாக வழங்க வேண்டும். தனியாரிடம் வழங்கக் கூடாது. கரும்பு விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலை இன்னும் பணத்தை தரவில்லை. அதை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அதிகாரி தற்போது 206 டன் யூரியா இருப்பு உள்ளது. செப். 24ல் 400 டன் யூரியா வர வுள்ளது.  உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார். வத்திராயிருப்பு பகுதி யில் பால் உற்பத்தியாளர் களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 32 மட்டுமே பல மாதங்களாக வழங்கப்படுகிறது. ஊக்கத் தொகையான லிட்டருக்கு ரூ.3 வழங்கப்படவில்லை. இதனால் உற்பத்தியாளர் கள் பாதிக்கப்படுகின்றனர் என விவசாயி ஒருவர் புகார்  தெரிவித்தார். இதையடுத்து உரிய நட வடிக்கை எடுக்க ஆவின் அதி காரிகளுக்கு ஆட்சியர் உத்த ரவிட்டார். மம்சாபுரத்தில் இருந்து திருவில்லிபுத்துர் செல்லும் சாலை மோசமாக உள்ளது.  எனவே, புதிய சாலை அமைக்க வேண்டுமென ஞானகுரு கோரிக்கை வைத்  தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார். பிசிண்டி கிராமத்தில் இறந்தோரின் உடலை கொண்டு செல்ல பாதை இல்லை. உடலை தகனம்  செய்ய மேடை இல்லை.  அமைத்து தர வேண்டுமென விவசாயி ஒருவர் தெரிவித்தார். மேலும், இருக்கண்குடி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, அங்கு 108 ஆம்பு லன்ஸ் வசதி செய்ய வேண்டு மென விவசாயி கருப்பையா  கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறையினருக்கு ஆட்சி யர் உத்தரவிட்டார்.   சின்னப்பரெட்டியபட்டி, கண்மாயில் மதகுகள் பழு தாகியுள்ளன. வெள்ளூர்  கண்மாயின் வரத்து கால்  வாய்கள் புதர்மண்டி கிடக்  கின்றன. மழைக்காலத்திற் குள் சீர் செய்ய வேண்டு மென ராஜேந்திரன் தெரிவித்  தார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.